சாதியா? இருக்கா?
"உளரும் பேதைக்கு மதியும் பாதி..
உலகமே மாறிடிச்சு! எங்கேடா சாதி.?
உறவாய் வாழும் இத்தேச வாசி..
உடைக்காதே ஒற்றுமையை சாதி பேசி!"--
"உண்மையா சொல்லு! இருக்காடா சாதி?"
ஏதும் அழுக்கற்று துவைத்திடு சாக்க..
ஏனின்னும் 'மாமி' வரல சமைக்க.?
ஏம்மா 'பிரியா' பாத்ரூம அலம்பிறேன்..
ஏங்க! 'ஐயர் மெஸ்'ல வாங்கி வரேன்..--
"ஏன்டா! இதுலயா இருக்கு சாதி?"
வா 'ராஜா' இல்லத்துள் வந்தமரு..
வரண்டிருக்கும் நா.. சொம்பு நீரருந்து..
வரேன்! இந்த சொம்ப 'அலம்பிடுறேன்'..
வாடகைக்கு 'பிராமணா' யாராச்சு காட்டிடேன்..--
"வர்ணம், சாதிலாம் எங்கயும் இல்லடா!"
பறையன் பாதிய பிடுங்கிக்கிறான்! பார்ப்பீர்!
பார்ப்பனர் நிலையென்ன!? நன்றாக கேட்ப்பீர்!
பாரதத்தில் இல்லையே திறனுக்கு மதிப்பு!
ஃபாரினுக்கு போனாதான் ஓடும் பிழைப்பு!--
"பாவி! சாதியா? இது நியாயம்!"
'சாமி', சலவைக்கு ஏதாச்சும் துணி?
'சாமி', வேணுமா? வாங்குங்க! எக்கனி?
'சாமி', சார்ட்டா? மீடியமா? முடி?
'சாமி', பரிகாரம் பண்ணுவது எப்படி?--
"சாமீ...! சாதி எங்க? சொல்லுடா!"
சேரி! செல்ல வேண்டாம் அவ்வழி..
சேறு, சாக்கடை, நாற்றம்! அம்மாடி!
'சேமமே' இல்லா மனுஷா! இவா நடுவுல..
சேவிக்கும் பகவான் காப்பார் நம்பள!--
"ச்சேரீ.. இதுவா சாதிக் கொடும?"
உண்பது சாம்பார், ரசம், மோரு..
உலகமே சைவமா மாறுது பாரு..
உயர்ந்தது! சத்துகள் நிறைந்ததோடு.
உடலுக்கு என்றும் உகந்த சாப்பாடு..
"உணவுலையா இருக்கு சாதி?"
உண்பது சாம்பார், ரசம், மோரு..
உலகமே சைவமா மாறுது பாரு..
உயர்ந்தது! சத்துகள் நிறைந்ததோடு.
உடலுக்கு என்றும் உகந்த சாப்பாடு..
"உணவுலையா இருக்கு சாதி?"
ஆருயிரே நினை நீங்க மனமில்லை..
அம்மா 'நம்மவாள கட்டிக்கோ'னு தொல்லை..
அதனால காதல் வாழ்வை மறந்திடலாம்!
அடுத்த ஜென்மத்தில் பிறப்பால் சேர்ந்திடலாம்!--
"ஆனா.. இது சாதின்னா அர்த்தம்?"
"பூநூலுடன் பார்ப்பனன் இணைந்ததுபோல் இம்மடமை..
புதுவுலகுடன் பின்னியது சாதிக் கொடுமை..
'புரியலயாடா? நீ என்ன பறப்பயலா?'
புண்ணியம் தரும் இத்தகைய செயலா?"--
"புரியுது! ஆனாலும் சாதி இல்லல?"
No comments:
Post a Comment