என் பெண்ணே!
வண்ணமயில் போலாடும் தேவமுகப் பெண்ணே- உன்
எழில்பொங்கும் பேரழகை கூற வந்தேன் கண்ணே.
உனைப் பாடுவதற்காக மனம் துடிதிருந்ததற்காக- உன்னை
கண்முன்னே நிறுத்தி இந்த அணி சேர்த்தேன் உனக்காக.
உன் அழகினிலே கொஞ்சம், பெற இயற்கை தாயும் கெஞ்சும்
அதைக் கூறிடவே சொற்களுக்கு தமிழிலேயே பஞ்சம்.
தேவதையா நீ? இல்லை. பேரழகா? அதும் இல்லை.
இறைவன் அவன் தானே கண்டெடுத்த பிள்ளை.
உன் விழியிருந்து பாயும் பல மின்கதிர்களின் மாயம்- அதை
கண்டிருக்க என் காத்திருப்பு என்று தான் ஓயும்
சொக்க வைக்கும் உந்தன் பூமுகமதனைக் கண்டு
தவிடுபொடி ஆகி போன நெஞ்சம் பல உண்டு.
உன் புன்சிரிப்பு போதும், என் நாடி நரம்பு யாவும்
மின்சாரம் பாய்ந்தது போல் துள்ளி விளையாடும்.
கொஞ்சும் குரலின் மயக்கம். பேர் இசையாவும் தோற்கும்- அதைக்
கேட்டிருந்தாலே போதும் என் பிணி யாவும் விலகும்.
மெலிதாய் வளையும் உன் இடை எனும் பொற்கொடியில்
வலிய வந்து சிக்கிக்கொண்டேனே ஒரு நொடியில்.
கறுநீரைப் பொழியும் போல் உள்ள குழலோ ஓர் அருவி-அந்த
கார்கூந்தல் விரித்தாடும் பதுமை நீ, என் அழகி
மெல் இதழ்களென்ன மிதக்கின்ற செந்நிற முகிலினமா? அதன்
முத்த மழை எந்நாளும் பொழிந்து என் மேல் விழுமா?
என் மனம் நிறைந்த பதுமை! பூமி கண்டிராத அழகை
விரைவில் கொண்டு சேர்ப்பாய் என்னிடம் இறைவா நீ
No comments:
Post a Comment