மகிழ் மறுத்தே
சிகை பிடித்தே.. சிரத் தகம் வெடித்தே..
சிம்மத் திரை நிகர் துடித்தே..
படுமூச் சனல் கரமெரித்தே..
பற்கள் தனை அதே கொறித்தே..
பின் சீர் நேரதை முறித்தே..
பிணி தனக்குத் தானிழைத்தே..
செவ் விதழொத்து முகம் திரித்தே..
செறி காடெரியுமாய் மெய் கொதித்தே..
விழியணை நீர் இமை மதகுடைத்தே..
விண்ணாய் உவர்நீர் மாரி பொழித்தே..
துறவின்றி மகிழ் மறுத்தே..
துவண்டு கந்தல் போல் கிடந்தேன்....
No comments:
Post a Comment