இதழ் அணைப்பாயோ?!
காதல் மடைகளைத் தாண்டும்- சொற்கள்
கடந்ததை, வாய் உரைத்திட வேண்டும்..
மங்கை மெய்யதில் கரமது பட..
மயங்கி, தழுவி, வருடியே வர..
கிளர்ச்சிகள் மோக மனதில் வெடிக்கும்- மாலைக்
கீழ்வானமாய் முகங்களும் சிவக்கும்..
கிளர்ச்சிகள் மோக மனதில் வெடிக்கும்- மாலைக்
கீழ்வானமாய் முகங்களும் சிவக்கும்..
இச்சை பொங்கிய விஜயனாய் திரிந்தோம்..- நம்
இதழ்களன்றி கண்ணில் வேறெதை அறிந்தோம்?..- நீ
உதடெனும் காய்நிலம் தாங்க..- அது
உயிர்த்தெழ முத்த மழைக்கே ஏங்க..
தாளுனது மெலிதாய் பதியுமாய்- இதழ்
மேலெனது பட்டுறையவே விழைகிறாய்..
தெள்ளெனவே தேடும் மனம்- இதழ்தாளுனது மெலிதாய் பதியுமாய்- இதழ்
மேலெனது பட்டுறையவே விழைகிறாய்..
கள்ளுண்ணவே துடிக்கும் உளம்..- நம்
கள்ளம் பூண்ட விழி- விரையும்
துளளி காமன் வழி..அள்ளி உதடணைக்கத் துணிவாயோ?- நாணத்
தள்ளிட இதழ் நகை அணிவாயோ?..